/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூன்றாம் சனி நிறைவு: மீன்கள் வாங்க கூட்டம்
/
மூன்றாம் சனி நிறைவு: மீன்கள் வாங்க கூட்டம்
ADDED : அக் 06, 2025 01:52 AM

கடலுார்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நிறைவடைந்ததையொட்டி, கடலுார் துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பக்தர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். நடு சனி எனப்படும் மூன்றாவது சனிக்கிழமையுடன் பெரும்பாலான பக்தர்கள் விரதத்தை முடித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அதே போன்று இறைச்சிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், இறால் 300, பால் சுறா 600, பாறை மீன் 500, வவ்வால் 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.