ADDED : பிப் 16, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் செயின்ட் மேரீஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி உதவி தலைமைஆசிரியர் மாசிலாமரி தலைமை தாங்கினார்.
தமிழ் ஆசிரியை செலின் மேரி வரவேற்றார்.
திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை அஸ்வந்தா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியை அந்தோணிம்மாள் லில்லி நன்றி கூறினார்.

