ADDED : ஆக 01, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பண்ருட்டி அடுத்த செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை தாங்கினார். ஆசிரியர் கலிவரதன் வரவேற்றார். மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன.
ஆசிரியர் சாமிப்பிள்ளை, ஆசிரியை மலர்விழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.