ADDED : அக் 27, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பண்ருட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியை சிவசக்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
ஆசிரியைகள் பூமாதேவி, அன்புசெல்வி ஆகியோர் சிறந்த மாணவிகளை தேர்வு செய்தனர். விழாவில் ஆசிரியர்கள் ஹரிபாபு, விஜயலட்சுமி, கலைவாணி டெல்பின் வசந்தா, கீதா, அமுதா, சகாயராணி பங்கேற்றனர். ஆசிரியை சுதர்சன தேவி நன்றி கூறினார்.

