ADDED : டிச 20, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார். ஆசிரியர் சித்ரா வரவேற்றார். உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
ஆசிரியர்கள் சித்ரா, கற்பகம் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவில், ஆசிரியர்கள் தேவேந்திரன், இளவரசன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்.

