ADDED : ஜன 28, 2025 05:00 AM
சிதம்பரம் :   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உலகச் சாதனை நிகழ்ச்சியாக, திருக்குறள் உலக நுால் மாநாடு நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில், உலகத் திருக்குறள் மையம் சார்பில், ஒரே நாளில் 100 இடங்களில், 100 தலைப்புகளில் திருக்குறள் உலக நுால் மாநாடு உலகச் சாதனை நிகழ்வு நடந்தது.
'திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் சிக்கல்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்க துவக்க விழாவில் துறை தலைவர் பாரி தலைமை தாங்கினார்.
துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அருட்செல்வி பங்கேற்று திருக்குறள் ஆய்வுக்கோவையினை வெளியிட்டார்.
திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி, முருகபூபதி, பேராசிரியர் இளங்கோவன், விஜயராணி, பாலசுப்பிரமணியன், நெல்லையப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
நிறைவு விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளர் பிரகாஷ்,  பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
ஆதிராமுல்லை நிறைவுறையாற்றினார்.

