/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்
/
அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்
அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்
அ.தி.மு.க.,வுடன் 3வது முறையாக மல்லுக்கட்டும் திருமாவளவன்
ADDED : மார் 20, 2024 11:50 PM
சிதம்பரம், : சிதம்பரம் (தனி) தொகுதி, 2008 ல், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், சிதம்பரம் தொகுதி, கடலுார் மாவட்டத்தில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள குன்னம், அரியலுார் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுதியில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் 1999 தேர்தலில் இருந்து தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வருவதால், சிதம்பரம் 'ஸ்டார்'தொகுதியாக பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக 1999 ம் ஆண்டு, பா.ம.க., பொன்னுசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அடுத்து 2004 ம் ஆண்டு மீண்டும் பொன்னுசாமியிடம் தோல்வியை தழுவினார். அதன் பின்பு 3 வது முறையாக பொன்னுசாமியை வீழ்த்தி வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதி எம்.பி.,யனார்.
ஆனால், 2014 தேர்தலில் அ.தி.மு.க., சந்திரகாசியிடம் தோல்விவை தழுவினார். அதன்பிறகு, 2019 ல் மீண்டும் 5 வது முறையாக, அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகருடன் போராடி வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி., யாக உள்ளார். இந்நிலையில் வரும் தேர்தலில், அ.தி.மு.க., வுடன் நேரடியாக 3 வது முறையாக மல்லுக்கட்ட உள்ளார்.
சிதம்பரம் தொகுதிதான் ராசியான தொகுதி, இங்குதான் போட்டியிடுவேன் என, சபத்துடன் களம் இறங்கியுள்ள அவர், தொகுதி மக்களின் கேள்வி கணைகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் கேள்வி.

