ADDED : ஜன 02, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதரவில் நடைபெற்று வரும் திருப்பாவை தொடர் சொற்பொழிவு கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜ கூடத்தில் நடந்தது.
திருப்பாவையின் பாசுரத்தின் விளக்கத்தை பேராசிரியர் கோகுலாச்சாரியார் எடுத்துரைத்தார். ராமானுஜக் கூடத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் பேரவை, கண்ணதாசன் பேரவை, இறைபணி மன்றம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
திருப்பாவை சொற்பொழிவு வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. அன்று மாலை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆலய தரிசன அறக்கட்டளையை சேர்ந்த ஸ்ரீராம், ராஜமோகன், பூவராகவன், சபா தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடும், தொடர் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

