/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேலஸ் சுமங்கலி சில்க்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு
/
பேலஸ் சுமங்கலி சில்க்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு
பேலஸ் சுமங்கலி சில்க்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு
பேலஸ் சுமங்கலி சில்க்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு
ADDED : ஜூலை 22, 2025 08:12 AM

கடலுார் கடலுார் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
ஐந்தாம் உலக தமிழ்ச்சங்க நிறுவன தலைவர் முத்துக்குமரன், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இவர், பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலிக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஐந்தாம் உலக தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ராசமோகன், ஆசிரியர் அருள்ஜோதி, பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மேலாளர் அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலி கூறுகையில், 'சில வாரங்களுக்கு முன்பு திருக்குறள் ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினேன். பொதுமக்கள் மத்தியில் திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடையின் மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.