/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 06, 2025 08:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், பழைய வண்டிப்பாளையம், கரையேறவிட்டகுப்பத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நேற்று மாலை 108 விளக்கு பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
சுமங்கலி பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பாக்யம் மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் வேண்டி பூஜை செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.