ADDED : ஆக 06, 2025 08:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
தலைவர், ராஜா ஜூவல்லரி உரிமையாளர் குமார் தலைமை தாங்கினார். துணை ஆளுனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார். டாக்டர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
சங்க நிர்வாகிகள் பெரியமூர்த்தி, வெங்கடேசன், முகமது இக்பால், முகமது அன்வர், ராம்சன், ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். 75 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
செயலாளர் சுவாமி நாதன் நன்றி கூறினார்.

