/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோகநாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
லோகநாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 10, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் புதுப்பாளையம் லோகநாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார் புதுப்பாளையம் லோகநாயகி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி நான்காம் வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.
50க்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை செய்தனர்.பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலபொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.