/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறை கண்காணிப்பாளர் இல்லாமல் தேர்வு எழுதிய கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு கல்லுாரியில் தான் இந்த கூத்து

ADDED : ஏப் 24, 2025 07:27 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில், போதிய எண்ணிக்கையில், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் இல்லாமல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 12 பாட துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த கல்லுாரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்கி, வரும் மே 15ம் தேதி வரை நடக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று 60 வகுப்பறைகளில் தேர்வு நடந்தது.
ஆனால், நேற்று நடந்த தேர்விற்கு தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட, போதிய பேராசிரியர்கள் இல்லாததால், 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் கண்காணிப்பாளர் இல்லாமல், ஒரு கண்காணிப்பாளர் இரண்டு, மூன்று தேர்வு அறைகளை கண்காணிக்கும் நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதினர்.
155 நிரந்தர பேராசிரியர்கள், 60 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வரும் இந்த கல்லுரியில், பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதே நிலை நீடித்தால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மூன்று நாட்களாக, சென்னையில் கவுரவ விரிவுரையாளர்கள் போராடி வருகின்றனர். இதனால், பெரும்பாலான கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு வருவதில்லை.
நிரந்தர பேராசிரியர்களுக்கும் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.