/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அன்பளிப்பு தொகையால் ஏலம் எடுக்க வந்தவர்கள்
/
அன்பளிப்பு தொகையால் ஏலம் எடுக்க வந்தவர்கள்
ADDED : ஆக 06, 2025 08:02 AM
கடலுார் அரசு மருத்துவமனை எதிரே வானுயர்ந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மருத்துமனை வளாகத்தில் மிகவும் பாழடைந்த 3 கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதையொட்டி தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., - பா.ம.க., - த.வா.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுக்க அரசு மருத்துவமனையில் கூடினர். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன் தலைமையில் ஊழியர்கள் ஏலத்தை தொடங்க தயாராகினர்.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்திய 'டிடி' சமர்ப்பிப்பவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றனர். உடன், அங்கு திரண்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
பணம் செலுத்தியவர்கள் ஏலம் தொடர்பாக கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, பணம் 'டிபாசிட்' செலுத்திய ரசீது வைத்திருந்தவர்களுக்கு கடலுாரில் கோலோச்சிவருபவரின் 'வாரிசு' ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார்.
ஏலம் கேட்க வந்தவர்கள் கட்டடம் தான் கிடைக்கவில்லை கலந்து கொண்டற்காக பணமாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சியில் ஏலம் கேட்காமல் திரும்பினர்.
ஏலம் கேட்காமல் இருப்பதற்கே 20 ஆயிரம் ரூபாய் என்றால் கட்டடத்தை ஏலம் எடுத்து இடித்தால் பல 'லகரம்' கிடைக்குமே என மன பிராந்தியில் பிதற்றினர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

