/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய் அதிகாரிக்கு மிரட்டல்; 7 பேர் மீது வழக்குப் பதிவு
/
வருவாய் அதிகாரிக்கு மிரட்டல்; 7 பேர் மீது வழக்குப் பதிவு
வருவாய் அதிகாரிக்கு மிரட்டல்; 7 பேர் மீது வழக்குப் பதிவு
வருவாய் அதிகாரிக்கு மிரட்டல்; 7 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 03, 2025 09:09 AM
மந்தாரக்குப்பம்; சேப்ளாநத்தம் ஊராட்சி யில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், வருவாய் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கடந்த 30ம் தேதி நடந்தது. முகாமில், கம்மாபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜதுரை 35; மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த தேவநாதன், செந்தமிழ்வளவன், சரத், சரத்குமார், மணிகண்டன், பெரியண்ணா, அஜித்குமார் ஆகிய 7 பேர், வருவாய் ஆய்வாளர் ராஜதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டி, மனுக்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜதுரை கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீதும் மந்தாரக்குப்பம் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.