நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், புவனகிரியில் தனியார் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடனை வசூலிக்கும் பணி செய்து வந்தார். வசூல் பணம் 3 லட்சத்து 1,352 ரூபாயை கையாடல் செய்தார்.
இதனை மேலாளர் மாரியப்பன் கண்டிக்கவே, குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு, 2 லட்சத்து 44 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தினார். மீதி பணத்தை கேட்ட மாரியப்பனுக்கு, |விஜயகுமார் கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், புவனகிரி போலீசார், விஜயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

