/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.ஏ.ஓ.,விற்கு மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
/
வி.ஏ.ஓ.,விற்கு மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 29, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுார் அடுத்த அரங்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சந்திரவ தனன், 45; பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் அதே பகுதி உள்ள ஏரிக்கு தனது உதவியாளர் உடன் சென்றார்.
அங்கு சிலர் டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்தது குறித்து விசாரித்துள்ளார். அப்போது மண் எடுத்த நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சந்திரவதனன் தன்னை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்தார்.
இதன் பேரில் வடலூர் போலீசார் ராசாக்குப்பம் பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி, தமிழரசன், அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

