/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூரை வீட்டில் புகுந்து மூன்றரை சவரன் திருட்டு
/
கூரை வீட்டில் புகுந்து மூன்றரை சவரன் திருட்டு
ADDED : செப் 19, 2024 11:30 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே கூரை வீட்டிற்குள் புகுந்து, மூன்றரை சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தங்கராசு, 55. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. கடந்த 17ம்தேதி ஆவினங்குடிக்கு உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று நேற்று காலை திரும்பினர். அப்போது வீட்டின் கூரை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், வீட்டிலிருந்த பெட்டியை திருடி சென்றனர். தேடி பார்த்தபோது, அருகே வயல்வெளியில் உள்ள குட்டையில் பெட்டி கிடந்தது. ஆனால் அதில் சான்றிதழ், ஆவணங்கள் இருந்தது. மூன்றரை சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.
இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.