ADDED : நவ 11, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் மணிமுத்தாற்றில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக எம்.பரூர் வி.ஏ.ஓ., தாமரைசெல்விக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், எம்.பரூர் - சின்னபரூர் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டார்.
அவ்வழியாக பைக்கில், சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்தி சென்ற தொட்டிக்குப்பம், ரயில்வே கேட் தெருவை சேர்ந்த சரத்குமார், 31; வடக்கு தெரு உதயகுமார், 27; எம்.பட்டி தினேஷ்குமார், 19, ஆகியோரை பிடித்து மங்கலம் பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.