ADDED : பிப் 15, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சாராயம் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பூதாமூர், பாலக்கரை மணிமுக்தாற்றங்கரை மற்றும் முகுந்தநல்லுார் செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், புதுப்பேட்டை பக்கிரிசாமி, 52; வீரபாண்டியன் தெரு முருகன் மகன் ரஞ்சித்குமார், 27; கோமங்கலம் பிரபாகரன், 37, என்பதும், தலா 10 லிட்டர் விஷ சாராயத்தை பிளாஸ்டிக் பைகளில் வைத்து, விற்றதும் தெரிந்தது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

