தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது


ADDED : ஜூன் 26, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சிலம்பிநாதன்பேட்டை நான்கு சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த பணிக்கன்குப்பம் சபாபதி மகன் நவீன்,25;சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன் சரவணன்,23; நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்த கனகவேல் மகன் நந்தகுமார்,27;ஆகிய மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து நவீன்,சரவணன்,நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us