/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரிடம் மொபைல் போன் பறித்த மூவர் கைது
/
வாலிபரிடம் மொபைல் போன் பறித்த மூவர் கைது
ADDED : டிச 07, 2024 07:19 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல்போன் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36. இவர் நேற்று முன்தினம் காலை முதனையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு 11:00 மணியளவில் தனது வீட்டிற்கு செல்ல விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மபர்கள் மூவர் ராஜேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபைல் போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். அப்போது, அருகில் இருந்த புறக்காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் தெரிவித்தார். உடன் அங்கிருந்த போலீசார் மூவரையும் விரட்டி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சக்தி நகரை சேர்ந்த பிரபாகரன் மகன் கோகுல், 19; பூதாமூர் பாரதி தெருவை சேர்ந்த வேலு மகன் ஆகாஷ், 19, லிங்கம் மகன் நவீன், 22, என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.