/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஏப் 22, 2025 07:40 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே வாடகை வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற மூவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கொடிகளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கவியரசன், 23; இவரது மனைவி சங்கீதா, 30. இருவரும் பெண்ணாடம் சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகே வாடகை வீட்டில் வசித்தனர். இவரது வீட்டில் கடந்த மாதம் 27 ம்தேதி கஞ்சா பதுக்கி விற்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார், கவியரசன், மனைவி சங்கீதா, கவியரசனின் நண்பர்கள் திருவள்ளூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் குமார் மகன் லோகேஷ்,23; சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை சீராளன் மகன் தியாகு,24; ஆகியோரை கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை செய்தனர்.
கவியரசன் மீது ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனில் 1 அடிதடி வழக்கு, லோகேஷ், தியாகு ஆகியோர் மீது சென்னை கொருக்குபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா, கொலை முயற்சி என தலா 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மூவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கவியரசன், லோகேஷ், தியாகு ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.