ADDED : நவ 11, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
திட்டக்குடி பஸ் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், திட்டக்குடி, பெரியார் நகர் சின்னதுரை மகன் மதன், 18, கோழியூர், மாரியம்மன் கோவில் தெரு ஷாகுல் ஹமீது மகன் சையது முஸ்தபா, 19, பொன்னுசாமி நகர், சீனிவாசன் மகன் வைத்தீஸ்வரன், 19, ஆகிய மூவர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.