/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் மூன்று நாள் பயிற்சி பட்டறை
/
அண்ணாமலை பல்கலையில் மூன்று நாள் பயிற்சி பட்டறை
ADDED : மார் 08, 2024 11:34 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மக்களியல் துறை சார்பில் 3 நாள் பயிற்சிப்பட்டறை துவக்க விழா நடந்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னை ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் பாலியல் சமத்துவம் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு துறைத்தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, சிதம்பரம் தாசில்தார் ஹேமா ஆனந்தி, பல்கலைக்கழக ஆளவைமன்ற உறுப்பினர் அரங்கபாரி, ராஜிவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவன பேராசிரியர் வசந்திராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லுாரி மாணவமாணவியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். இணை பேராசிரியர் பீமலதாதேவி நன்றி கூறினார்.

