ADDED : நவ 09, 2026 04:57 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: கோவில் பூசாரியை தாக்கிய, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை வெட்டிக்குளத்தை சேர்ந்தவர் அரசன்,60; மாரியம்மன் கோவில் பூசாரி. இவர் நேற்று (நவ.,8) படைக்க, கோவிலுக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன் உட்பட மூன்று பேர், அவரை வழிமறித்து நீ கோவிலுக்கு படைக்க வரக்கூடாது எனக்கூறி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கஜேந்திரன், 37; தேவேந்திரன், 35; ராஜேஷ், 34; ஆகியோரை கைது செய்தனர்.
