தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/2 டிரைவர்களை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது

2 டிரைவர்களை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது

2 டிரைவர்களை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது


ADDED : நவ 09, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: சரக்கு வாங்கும் போது ஏற்பட்ட தகராரில், டிரைவர்கள் இருவரை பாட்டிலால் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் மோகன்,26; பஸ் டிரைவர். இவர் சேந்திரக்கிள்ளையைச் சேர்ந்த தனது நண்பர் சந்தோஷ்குமார் உடன், நேற்று (நவ.,8) புதுச்சத்திரம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி திரும்பும்போது, அங்கு சரக்கு வாங்க நின்றிருந்த, மணிக்கொல்லையைச் சேர்ந்த செட்டி மகன் சிலம்பரசன் மீது எதிர்பாராமல் இடித்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த சிலம்பரசன், வில்லியநல்லூரை சேர்ந்த சக்திவேல் மகன் சந்துரு, முருகன் மகன் முரளி, பரங்கிப்பேட்டை மதியழகன் மகன் சரவணன் நால்வரும் சேர்ந்து மோகன், நண்பர் சந்தோஷ்குமார் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த இருவரும், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து சிலம்பரசன், 30; சந்துரு, 20; சரவணன், 28; ஆகிய மூவரையும் கைது செய்து, தலைமறைவாக உள்ள முரளியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us