ADDED : செப் 19, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விநாயகர் சிலை ஊர்வலத்தில், வாலிபரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் எழில்குமார், 23. இவர் கடந்த 16ம் தேதி சின்னகண்டியங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றார்.
அப்போது, அதேபகுதியை சேர்ந்த மணிவேல் மகன் சேதுராமன், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்ற போது, எழில்குமார் முகத்தில் சிகெரெட் புகை விட்டார். அதனை கண்டித்த எழில்குமாரை, சேதுராமன், சகோதரர் குருமூர்த்தி, உறவினர்கள் சிவக்குமார், அன்புமணி ஆகியோர் திட்டி தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, சேதுராமன், சிவக்குமார், அன்புமணி ஆகியோரை கைது செய்தனர்.
