ADDED : டிச 10, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மணல் கடத்திய டிப் பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது, கார்குடல் சிவன் கோவில் ஆற்றங்கரை வழியாக வந்த டி.என்31 - பி.இ 9689 பதிவெண் கொண்ட டிராக்டர் டிப்பரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், 1 யூனிட் ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி வருவது தெரிந்தது. மேலும், டிராக்டர் டிப்பரை ஓட்டி வந்த கார்குடல் கதிர்வேல் மகன் வெற்றிவேல் உட்பட மேலும் மூவர் தப்பியோடினர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.