/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
/
திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 29, 2024 06:40 AM
கடலுார் : தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் அருண் கோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா சிறப்புரையாற்றினார்.
இதில், வள்ளுவர் இன மக்களுக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியங்களில் வள்ளுவர் மக்களை உறுப்பினராக்கி, ஜோதிடக்கலையை தொழில்நுட்ப கலையாக ஏற்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் சேத்னா, குமார், கிருஷ்ணகுமார், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.