/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
19 மையங்களில் இன்று மறியல் பணியாளர் சங்கம் அறிவிப்பு
/
19 மையங்களில் இன்று மறியல் பணியாளர் சங்கம் அறிவிப்பு
19 மையங்களில் இன்று மறியல் பணியாளர் சங்கம் அறிவிப்பு
19 மையங்களில் இன்று மறியல் பணியாளர் சங்கம் அறிவிப்பு
ADDED : பிப் 17, 2024 11:14 PM
கடலுார்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் 19 மையங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடக்கிறது என, அதன் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலுாரில், அவர் கூறிய தாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நாளை (இன்று) 18ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னையை தவிர கடலுார், விழுப்புரம், சேலம் உட்பட 19 மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.