/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவதிகை கோவிலில் இன்று சம்வத்சர உற்சவம்
/
திருவதிகை கோவிலில் இன்று சம்வத்சர உற்சவம்
ADDED : மார் 18, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக 8ம் ஆண்டு நிறைவு விழாவிற்கான சம்வத்சர உற்சவம் இன்று நடக்கிறது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்து 8ம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, சம்வத்சர உற்சவம் இன்று 18ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, இன்று மாலை 4:00 மணியளவில் முதற்கால ேஹாமம் துவங்கி, தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது.
நாளை 19ம் தேதி காலை 8:00 மணியளவில் இண்டாம் கால ேஹாமம், 10:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

