/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்
/
பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்
ADDED : ஜன 04, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு
வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பினை அனைத்து ரேஷன்கடைகள் மூலம் வரும் 9ம் தேதி முதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ரேஷன்கார்டுதாரர்கள் உட்பட 7லட்சத்து 78ஆயிரத்து 296 பேருக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.