/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
/
அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
ADDED : மார் 11, 2024 05:27 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவில் உற்சவத்தில், மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை நடந்தது.
விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், 4ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வாக, 5ம் நாள் உற்சவத்தில் இரவு 7:00 மணியளவில், நிசாசனி வயிற்றை கிழித்து குடலை பிடுங்கி மாலையிட்டு, குழந்தையை முறத்தில் ஏந்தி வரும் ஐதீக நிகழ்வு நடந்தது.
நேற்று முன்தினம் மாலை மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இதற்காக, அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு திருக்கல்யாணம், நாளை தேரோட்டம், நாளை மறுநாள் செடல் திருவிழா, 14ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

