/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 18, 2024 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; காணும் பொங்கலையொட்டி, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில், நேற்று காணும் பொங்கலையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால், காலை முதலே சுற்றுலா மைய வளாக முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வனக்காடுகளை குடும்பத்துடன் படகில் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
படகில் செல்ல முடியாதவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி வனக்காடுகளை கண்டுகளித்தனர்.
கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.