UPDATED : ஜூலை 29, 2026 10:35 PM
ADDED : ஜூலை 29, 2026 10:14 PM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே மாமனார் நிலத்தை உழுவதற்கு சென்ற மருமகன், டிராக்டர் கவிழ்ந்து இறந்தார்.
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த கட்டையன் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சபாபதி, 38; டிரைவர். இவர் காலை தனது மாமனார் திட்டக்குடி அடுத்த கோழியூர் ஆனந்தன் புதிதாக வாங்கிய டிராக்டரை, எழுமாத்துார் அருகே உள்ள தனது மாமனார் நிலத்தை உழுவதற்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது நிலத்தின் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிர்பாாரத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த சபாபதி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆவினங்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
