/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
/
ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 14, 2025 11:30 PM
பெண்ணாடம்: வெள்ளாற்றில் மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, முருகன்குடி வெள்ளாற்றில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி சென்றது தெரிந்தது. தொடர்ந்து டிரைவர், உரிமையாளர் தப்பி ஓடினர்.
பின்னர், 1 யூனிட் மணலுடன் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் முருகன்குடியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ஜெயவேல், டிரைவர் மகாதேவன் என்பதும், அனுமதியின்றி வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்திச் சென்றதும் தெரிந்தது. பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

