/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வர்த்தக சங்கம் கோரிக்கை
/
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வர்த்தக சங்கம் கோரிக்கை
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வர்த்தக சங்கம் கோரிக்கை
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : செப் 30, 2025 07:57 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனில் சோழன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம், நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை ரயில்வே சுரங்கபாதையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
நெல்லிக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனில் சோழன், திருச்செந்துார் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் வங்கியில் கடன் பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்.
விவசாயிகள் நலன்கருதி கரும்புக்கான விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வியாபாரிகளின் மின் கட்டண செலவை குறைக்க சூரிய மின் உற்பத்தி திட்டம் அமைக்க மானியத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், காங்., மாவட்ட தலைவர் திலகர், வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் உடனிருந்தனர்.