/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிற்சங்க ரகசிய ஓட்டெடுப்பு என்.எல்.சி.,யில் தேர்தல் விதி அமல்
/
தொழிற்சங்க ரகசிய ஓட்டெடுப்பு என்.எல்.சி.,யில் தேர்தல் விதி அமல்
தொழிற்சங்க ரகசிய ஓட்டெடுப்பு என்.எல்.சி.,யில் தேர்தல் விதி அமல்
தொழிற்சங்க ரகசிய ஓட்டெடுப்பு என்.எல்.சி.,யில் தேர்தல் விதி அமல்
ADDED : ஏப் 12, 2025 05:28 AM
நெய்வேலி : என்.எல்.சி.,யில் வரும் 25 ம்தேதி ரகசிய ஓட்டெடுப்பு நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
கடலுாா் மாவட்டம், என்.எல்.சி.,யில் பணிபுரியும் 6,000 நிரந்தர தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் உரிமை பிரச்னைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக செயல்படுவதற்கு ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ரகசிய ஓட்டெடுப்பில் 51 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெறும் 2 அல்லது 3 சங்கங்கள் அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக அறிவிக்கப்படும். ரகசிய ஓட்டெடுப்பு தேதியை நேற்று முன்தினம் மத்திய தொழிலாளர் நல ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் நேற்று அமலுக்கு வந்ததை தொடர்ந்து என்.எல்.சி., நிர்வாகம் 7 அம்சங்கள் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, எந்த ஒரு தொழிற்சங்கமும் பணி நேரத்தில் தொழிலகம் அல்லது அலுவலகத்திற்குள் கூட்டம், பிரசாரம் மற்றும் வாயிற்கூட்டம் நடத்தக்கூடாது. உற்பத்திக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
என்.எல்.சி.,க்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் உடமைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டக்கூடாது. தொழிலாளர் அல்லாதோர் மற்றும் பணியில் இல்லாதோர் பணியிடங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தொழிற்சங்கங்கள் அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொழிற்சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என என்.எல்.சி., நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.