/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு தொழிற்சங்கங்கள் தீவிர பிரசாரம்
/
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு தொழிற்சங்கங்கள் தீவிர பிரசாரம்
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு தொழிற்சங்கங்கள் தீவிர பிரசாரம்
என்.எல்.சி.,யில் ரகசிய ஓட்டெடுப்பு தொழிற்சங்கங்கள் தீவிர பிரசாரம்
ADDED : ஏப் 21, 2025 06:47 AM
நெய்வேலி : நெய்வேலி என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்களின் ரகசிய ஓட்டெடுப்புக்காக, தொழிற்சங்கங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடலுார் மாவட்டம், என்.எல்.சி.,யில் வரும் 25ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டெடுப்பு நடக்கிறது. நெய்வேலி சட்டசபை தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது என்.எல்.சி., யில் பணிபுரியும் 25,000 பணியாளர்களின் குடும்பங்கள் என்பதால், அரசியல் கட்சிகள் ரகசிய ஓட்டெடுப்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
ரகசிய ஓட்டெடுபின்போது, தி.மு.க., தரப்பில் அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., தரப்பில் மாவட்ட செயலாளர்கள் சொரத்துார் ராஜேந்திரன், அருண்மொழித்தேவன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் ஆகியோர் சொந்த பணத்தை செலவு செய்து, ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பா.தொ.ச.,-சி.ஐ.டி.யூ.,- தி.தொ.ஊ.ச., பி.எம்.எஸ்., ஆகிய 4 தொழிற்சங்கத்தினர், தொ.மு.ச., மற்றும் அ.தி.மு.க., தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்கின்றனர்.
தொ.மு.ச.,வின், சில நிர்வாகிகள் மீது உறுப்பினர்களிடையே காணப்படும் அதிருப்தி, வர இருக்கும் ரகசிய ஓட்டெடுப்பில் தொ.மு.ச.,வின் சிங்கிள் மெஜாரிட்டி வெற்றியை பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், தொ.மு.ச., பேரவை சார்பில், என்.எல்.சி., தொ.மு.ச., வின் உட்கட்சி தேர்தலை வரும் 25ம் தேதிக்கு முன்பாகவே அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

