/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வியாபாரிகள் பாதிப்பு வர்த்தக சங்கம் மனு
/
வியாபாரிகள் பாதிப்பு வர்த்தக சங்கம் மனு
ADDED : ஜன 03, 2026 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: திடீர் கடைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனனிடம், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருமண மண்டபங்களில் 'திடீர்' கடைகள் தோன்றி இயங்கி வருகின்றன. இதனால், வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால், திடீர் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், துணை தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் கவிமதி, செய்தி தொடர்பாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

