/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
/
வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 27, 2025 11:38 PM

நெல்லிக்குப்பம்: நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டட பணியை விரைந்து முடிக்க வேண்டுமென வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
நெல்லிக்குப்பம் நகர வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர்அலி தலைமையில் நடந்தது. செயலாளர் மணிவண்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார். சட்ட ஆலோசகர் கெய்க்வாட்பாபு சட்ட பிரச்னைகளுக்கான தீர்வுகளை கூறினார்.
நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு பற்றிய புத்தகங்களை வழங்கினார். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டுமென இன்ஸ்பெக்டர் வேலுமணி கேட்டுக் கொண்டார்.
நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும், நாய்கள் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும்.ஆலை ரோட்டை ஒரு வழிபாதையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் அசன்அலி, அமைப்பாளர் அதியமான், ஆலோசகர் சுரேஷ்மல் சேமாரடியா, சுந்தரமூர்த்தி, காசிம் உட்பட பலர் க லந்து கொண்டனர்.

