/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டுமான பணிக்கு தடுப்பு வியாபாரிகள் எதிர்ப்பு
/
கட்டுமான பணிக்கு தடுப்பு வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : மார் 31, 2025 04:32 AM

பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலைய வளாகத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்காக தடுப்பு அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி நகராட்சி சார்பில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4.75 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் நிலைய வளாகத்தில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 21ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கடலுார், விழுப்புரம் பகுதி பஸ்கள் நிற்கக் கூடிய இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தகடுகளால் தடுப்பு அமைக்கும் பணி நேற்று நடந்தது.
தடுப்புகள் அமைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து வியாபாரம் பாதிக்காத வகையில் கடைகள் இல்லாத இடத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்தது.