/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
/
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 07, 2026 06:09 AM

கடலுார்: கடலுாரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில், மாவட்ட அரசு மருத்துவமனை அருகில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமையில், தாசில்தார் மகேஷ், டி.எஸ்.பி., தமிழ் இனியன் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, 7 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரிலேயே ஆக்கிரமிப்பு அகற்ற வந்துள்ளதாக அதிகாரிகள் கூறி சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது.

