/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாரம்பரிய நெல் சாகுபடி விதை அலுவலர்கள் ஆய்வு
/
பாரம்பரிய நெல் சாகுபடி விதை அலுவலர்கள் ஆய்வு
ADDED : டிச 27, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 75; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது வயல்களில் கடந்த 15 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களான கருப்புகவுனி, தங்க சம்பா, கிச்சிலி சம்பா, கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் வகைகளை பருவத்திற்கு ஏற்றவாறு சாகுபடி செய்து வருகிறா ர்.
இந்த வயல்களை கடந்தாண்டு ஆய்வு செய்த வே ளாண் அதிகாரிகள் இயற்கை பாரம்பரிய விவசாயி என அங்கக சான்று வழங்கினர். இரண்டாம் ஆண்டு சான்று வழங்க சிதம்பரம் வட்டார விதைசான்று ஆய்வாளர் சுகந்தி, உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ஆகியோர் நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.

