ADDED : ஜன 15, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலையம் சார்பில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமை தாங்கினார். மது போதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்க கூடாது.
பொது இடங்களில் தேவையில்லாமல் கும்பல் சேரக்கூடாது. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

