ADDED : ஜன 09, 2026 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ஜெனிதா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் விபத்தில்லாமல் பயணிக்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, ெஹல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வழக்கறிஞர் ராம்சிங், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், சட்ட தன்னார்வலர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

