ADDED : ஜன 09, 2026 06:40 AM

புவனகிரி: புவனகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வேளாண் துறை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை, துவக்கி வைத்தார்.
புவனகிரியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் தலைமை தாங்கினார். மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி வரவேற்றார்.
சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் முன்னிலை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ' கடலுார் மாவட்டத்தில் 7,85,547 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், 447 இலங்கை தமிழர் அட்டைதாரர்கள் என மொத்தம் 7,85,994 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்களுடன், ரூ.238.77 கோடி வழங்கப்படுகிறது.
ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் தங்கள் கடைக்கு உரிய அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், 'என்றார்.
நிகழ்ச்சியில் மின்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி, நகர பொறுப்பாளர் ஜெய், புவனகிரி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், மதியழகன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் பாலு, சபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணைப்பதிவாளர் ரங்நாதன் நன்றி கூறினார்.

