/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 16, 2025 11:45 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 20 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் மேலவீதி மற்றும் தெற்கு வீதியில் உள்ள கடைவீதிகளுக்கு ஜவுளி, மளிகை மற்றும் பொருட்கள் வாங்க, மக்கள் நேற்று முதல் அதிகரித்த துவங்கியுள்ளது. மேலும் தரை கடை வியாபாரிகளும் கடை போட துவங்கியுள்ளனர். இந்நிலையில், நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று(17 ம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கடலுார், வடலுார், விருத்தாசலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்தில் புறப்பட்டு, எஸ்.பி.,கோவில் தெரு, பச்சையப்ப பள்ளி சந்திப்பு வழியாக தெற்கு வீதி, கீழவீதி வழியாக கஞ்சித்தொட்டி வந்து, நகரப்பகுதியை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
அதேபோல் மேற்கண்ட மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் வரும் பஸ்கள், வண்டிகேட் வழியாக அண்ணாகுளம் எதிரில் செல்லும் புவனகிரி பைபாஸ் சாலை வழியாக, சென்று காட்டுமன்னார்கோவில் பைபாஸ் சந்திப்பில் இருந்து ஓமக்குளம், மந்தக்கரை வழியாக சிதம்பரம் நகரத்திற்கும் சென்ற, பஸ் நிலையம் செல்ல வேண்டும் என நகர காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்து தெரிவித்துள்ளனர்.