/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்
/
தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 12, 2025 07:01 AM

வேப்பூர்: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால், வேப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையொட்டி நேற்று 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி, சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டங்களை சேர்ந்தோர், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ், கார், பைக் மற்றும் வேன்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மார்க்கம் செல்லும் சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

